» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரயில் நிலைய வளாகத்தில் விநாயகர் கோயில் அகற்றம் : போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கைது!

வியாழன் 20, ஆகஸ்ட் 2026 9:16:53 PM (IST)

KurumbuRvijayagar.jpg

குரும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் இருந்த பழமையான விநாயகர் கோயில், நீதிமன்ற உத்தரவின்படி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அதிகாலையில் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் இருந்த விநாயகர் கோயில், ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதை அகற்ற ரயில்வே நிர்வாகம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோயிலை அகற்றுமாறு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கோயில் அகற்றும் முயற்சியின் போது இந்து முன்னணி, இந்து மகாசபை மற்றும் பாஜகவினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் தற்காலிகமாகப் பணி கைவிடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோயிலைத் திறந்து வைத்து யாகசாலை வளர்த்துச் சிறப்புப் பூஜைகளில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நரேஷ், திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார், ஏடிஎஸ்பிக்கள் சகாய ஜோஸ், திபு, குரும்பூர் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் ரயில்வே அசிஸ்டன்ட் கமிஷனர் சிவதாஸ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு போலீசார் கூறிய நிலையில், அவர்கள் செல்ல மறுத்ததால் தெற்கு மாவட்ட இந்து முன்னணிச் செயலாளர் அருணாச்சலம், ஆழ்வை ஒன்றிய பாஜக செயலாளர் மனோகரன், மாநில இளைஞரணிச் செயலாளர் விக்னேஷ் உட்படப் பெண்கள் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

KurumburVinayagarm.jpg

கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, அங்கிருந்த விநாயகர் சிலையை அகற்றிய காவல்துறையினர் அதை ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர். அதன்பின் ஜேசிபி  இயந்திரங்கள் மூலம் கோயில் கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. விடிய விடிய நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் குரும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து

rambooAug 21, 2026 - 08:39:30 PM | Posted IP 162.1*****

Mohan losares jebakoottathukku varravanga palakkathosathila pillayar koil poi nettri niraya viputhi poosi vanthurranga athan...eduthuttom

முட்டா இந்து முன்னணி அவர்களுக்குAug 21, 2026 - 10:28:01 AM | Posted IP 172.7*****

கோயில் மட்டும் அல்ல, தர்கா, மசூதி , சர்ச் , கல்லறை ஆனாலும் இடிக்கப்படும்.

TamilanAug 21, 2026 - 07:34:30 AM | Posted IP 172.7*****

Even if Railway station land what is issues if its distributed railway track? Why recently temple demolitions. This is unfair, railway department is central government, they have lot of land occupancy every where. For small Ganesh temple, it's not good.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory