» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

4 சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மதபோதகருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம் (53). மதபோதகரான இவர் அப்பகுதியில் ஊழியம் செய்து வந்ததுடன், பல்வேறு மாவட்டங்களுக்குப் பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று ஊழியம் செய்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு, ஊழியம் செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட 12, 13 மற்றும் 8 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட மொத்தம் 4 சிறுமிகளுக்கு ஆபிரகாம் பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் கூறிய தகவலின் அடிப்படையில், பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட ஊரக உட்கோட்ட மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி, மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அனைத்துச் சாட்சிகளும் நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட மதபோதகர் ஆபிரகாமுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இதுவரை 4 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:53:27 AM (IST)

நாகர்கோவிலில் மாணவர்களை அனுமதித்த பார் மூடல் : எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி ஆய்வு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:43:22 AM (IST)

நாகர்கோவில் - பெங்களூரு சுற்றுவழி வந்தே பாரத் ரயிலுக்கு குமரி பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:13:17 PM (IST)

புனித சவேரியார் தேவலாயத்தில் ரூ.2.28 கோடியில் சீரமைப்பு பணி: ஆட்சியர் பிரதாப் ஆய்வு
புதன் 19, ஆகஸ்ட் 2026 12:22:31 PM (IST)

கடல் சீற்றம் எச்சரிக்கை: கடலோர மீனவ மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 11:44:38 AM (IST)

ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி: குமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 3:49:18 PM (IST)


