» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புதிய ஆட்டோ கட்டணக் கொள்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்: எம்பவர் இந்தியா கோரிக்கை!

புதன் 19, ஆகஸ்ட் 2026 10:23:29 AM (IST)

ஆட்டோ ஓட்டுநருக்கு நியாயமான வருமானம், நுகர்வோருக்கு நியாயமான கட்டணம் என்ற அடிப்படையில் புதிய ஆட்டோ கட்டணக் கொள்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் செயல் இயக்குநர் ஆ.சங்கர் தமிழக அரசுக்கு விடுத்துள் கோரிக்கை மனு: பயணியின் தனிப்பட்ட தேவைக்காக ஆட்டோ காத்திருக்கும் நேரத்திற்கு மட்டும் காத்திருப்புக் கட்டணம் கணக்கிடப்பட வேண்டும்r. சாதாரண போக்குவரத்து நெரிசல் அல்லது சிக்னலில் கட்டாயமாக நிற்கும் நேரத்திற்கு தேவையற்ற கூடுதல் கட்டணம் வசூலிக்காத வகையில் அரசு தெளிவான விதிமுறையை வகுக்க வேண்டும்.

அரசு புதிய கட்டணத்தை அறிவித்தவுடன் அனைத்து ஆட்டோக்களிலும் அதற்கேற்ப அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் மீட்டர் முறையாக calibration செய்து பயன்படுத்தப்பட வேண்டும். மீட்டர் கட்டணத்திற்கு மேலாக திரும்பும் கட்டணம் காலி வாகனக் கட்டணம் போன்ற பெயர்களில் கூடுதல் தொகை வசூலிக்கக்
கூடாது.

ஒவ்வொரு ஆட்டோவிலும் குறைந்தபட்ச கட்டணம் கி.மீ. கட்டணம் பகல் மற்றும் இரவு காத்திருப்புக் கட்டணம், இரவு நேரம் மற்றும் புகார் தொடர்பு விவரங்கள் அடங்கிய அரசு அங்கீகரிக்கப்பட்ட கட்டண அட்டவணை தமிழில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

மீண்டும் பல ஆண்டுகள் கட்டணம் மாற்றப்படாமல் இருக்கும் நிலையைத் தவிர்க்க, எரிபொருள் விலை, உதிரிபாகங்களின் விலை, பராமரிப்பு செலவு, பணவீக்கம் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரச் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணத்தை மறுஆய்வு செய்யும் நிரந்தர நடைமுறை உருவாக்க வேண்டும்.

இதற்காக போக்குவரத்துத் துறை, State Transport Authority, Legal Metrology, நுகர்வோர் அமைப்புகள், ஆட்டோ ஓட்டுநர் பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார போக்குவரத்து நிபுணர்கள் அடங்கிய கட்டண மறுஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநருக்கு நியாயமான வருமானம் நுகர்வோருக்கு நியாயமான கட்டணம் ஒருவழிப் பயணத்திற்கு மட்டுமே கட்டணம் மீட்டர் மூலம் வெளிப்படையான வசூல் என்ற அடிப்படையில் புதிய ஆட்டோ கட்டணக் கொள்கையை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

எனவே, மேற்கண்ட கோரிக்கைகளை நுகர்வோர் இயக்கங்களின் சார்பில் தமிழக அரசு சாதகமாகப் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நியாயமான கட்டண முறையை சட்டப்படி அறிவித்து நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நுகர்வோர் இயக்கங்கள் சார்பில் பின்வரும் கட்டண முறையை அரசு பரிசீலித்து நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்:

பகல் நேரம்: முதல் 1.8 கி.மீ. ரூ.50 குறைந்தபட்ச கட்டணம்

கூடுதல் ஒவ்வொரு 1 கி.மீ. - ரூ.12

காத்திருப்புக் கட்டணம் மணிக்கு ரூ.40

இரவு 11.00 மணி முதல் காலை 5.00 மணி வரை: முதல் 1.8 கி.மீ. - ரூ.60 குறைந்தபட்ச கட்டணம் கூடுதல் ஒவ்வொரு 1 கி.மீ. ரூ.12

காத்திருப்புக் கட்டணம் மணிக்கு ரூ.50

ஒருவழிப் பயண தூரம் மட்டுமே கணக்கிடப்பட வேண்டும்:

ஆட்டோ கட்டணம் பயணி உண்மையில் பயணிக்கும் ஒருவழித் தூரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட வேண்டும். பயணியை இறக்கிவிட்ட பின்னர் ஆட்டோ காலியாகத் திரும்பிச் செல்லும் தூரத்திற்கு பயணியிடம் எந்தவிதமான திரும்பும் கட்டணம் அல்லது கூடுதல் கட்டணமும் வசூலிக்கக் கூடாது.

உதாரணமாக பயணி இடத்திலிருந்து B இடத்திற்கு 5 கி.மீ. பயணம் செய்தால் A முதல் B வரையிலான 5 கி.மீ. மட்டுமே கட்டணக் கணக்கீட்டில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். B-யிலிருந்து ஆட்டோ திரும்பிச் செல்லும் தூரம் பயணியின் கட்டணத்தில் சேர்க்கப்படக் கூடாது.


மக்கள் கருத்து

KARNARAJ RAMANATHANDec 22, 1787 - 10:30:00 PM | Posted IP 172.7*****

RIGHT AND ESSENTIAL Request. Need to streamline this. Also Autos should maintain road regulations, many of them doesnt follow proper turning signals.

ஆனந்த்Aug 19, 2026 - 12:03:03 PM | Posted IP 162.1*****

சொல்லிட்டான் பைக் டாக்ஸி அனுமதி தேவை அதுக்கு குரல் கொடுக்க முடியுமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory