» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தெருக்களில் தவித்த ஆதரவற்றோர் மீட்பு: சிகிச்சை முடிந்து முதியோர் இல்லத்தில் அனுமதி!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 7:52:36 PM (IST)

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த நபர்களை மீட்டு, அவர்களுக்குத் தேவையான உடனடி மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பான மறுவாழ்வு வசதிகளை வழங்கும் சிறப்பு நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா ஆலோசனையின்படி, சமூக நலத்துறை மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து இச்சிறப்பு மீட்புப் பணியை முன்னெடுத்தன. மீட்கப்பட்ட ஆதரவற்ற நபர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை மற்றும் உணவு வழங்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர், அவர்களின் நீண்டகால பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதிசெய்யும் வகையில், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் காப்பகம் / முதியோர் இல்லத்தில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர். ஆதரவற்ற மூத்த குடிமக்களை மீட்கும் இந்தப் பணியில் சமூக நலத்துறை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.
மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர் நிவேதிதா, நிதி கல்வியறிவு வல்லுநர் ஜெயலட்சுமி, பாலின நிபுணர் முருகப்பெருமாள், ஒருங்கிணைந்த சேவை மையத்தைச் சேர்ந்த கனகவல்லி, கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள் தொண்டு நிறுவனத்தின் தலைவர் திருமதி விஜயா மற்றும் செயலாளர் திருமதி தங்கதீபா சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனை மற்றும் செவிலியர் கல்லூரி முதல்வர் எலிசபெத் மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள் இணைந்து செயல்பட்ட அனைத்து அமைப்புகளின் இந்த மனிதநேய நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மத்தியில் பெருமளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவி தற்கொலை விவகாரம்: கல்லூரி முதல்வர் கைது - கல்லூரி விடுமுறை நீட்டிப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:53:27 AM (IST)

நாகர்கோவிலில் மாணவர்களை அனுமதித்த பார் மூடல் : எஸ்.பி. ஸ்டாலின் அதிரடி ஆய்வு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 11:43:22 AM (IST)

நாகர்கோவில் - பெங்களூரு சுற்றுவழி வந்தே பாரத் ரயிலுக்கு குமரி பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:13:17 PM (IST)

புனித சவேரியார் தேவலாயத்தில் ரூ.2.28 கோடியில் சீரமைப்பு பணி: ஆட்சியர் பிரதாப் ஆய்வு
புதன் 19, ஆகஸ்ட் 2026 12:22:31 PM (IST)

கடல் சீற்றம் எச்சரிக்கை: கடலோர மீனவ மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 11:44:38 AM (IST)

ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி: குமரி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 3:49:18 PM (IST)



RamanathanAug 18, 2026 - 08:22:27 PM | Posted IP 172.7*****