» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:40:59 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக வில்லுக்குறி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு சுகாதார நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும் அங்கு செயல்பட்டு வரும் அங்கான்வாடி மையத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடி இனிப்பு வழங்கினார்கள். அங்கான்வாடி குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்ட மதிய உணவு மற்றும் குடிநீர் சுகாதாரத்துடன் இருக்கிறதா என கேட்டறிந்தார்.
அதனைத்தொடர்ந்து பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட தக்கலை பிரதான வாசிப்பு நிலையம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டதோடு, புதுப்பிக்கப்பட்ட இக்கட்டிடத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு நகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் பத்மநாபபுரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, உள்நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்படுவதை கேட்டறிந்தார்.
தொடர்ந்து பாரம்பரியமிக்க பத்மநாபபுரம் அரண்மனையினை ஆய்வு மேற்கொண்டார்கள். அங்கு உள்ள அருங்காட்சியம் மற்றும் பிரதான சின்னங்கள் பார்வையிட்டு, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்படுத்திட தொல்லியல்துறை, நகராட்சி ஆணையர் மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் முளகுமூடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மாநில பகிர்வு திட்டத்தின் கீழ் ரூ.1.8 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேரூராட்சி அலுவலக பணியினை நேரில் பார்வையிட்டு, நடைபெற்று வரும் பணிகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். தொடர்ந்து திக்கணங்கோடு பகுதியில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுகளில் பேரூராட்சி உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியராஜன், சிவசங்கரன்பிள்ளை, பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் கண்மணி, செயல் அலுவலர் .அம்புஜம், துறை அலுவலர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - கோவை ரயிலை நேமம் வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:51:48 PM (IST)

அரசு தலைமை மருத்துவமனையில் நர்ஸ் பணி: ஆகஸ்ட் 27 வரை விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 3:34:52 PM (IST)

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:53:44 PM (IST)

பிரயாக்ராஜ் சிறப்பு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:18:11 AM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)


