» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்துப் பெண்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 11:43:27 AM (IST)

தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வராததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடிக்குக் குடிநீர் சப்ளை செய்யும் பிரதான குழாய் கடந்த வாரம் உடைந்ததால் நகரில் குடிநீர் விநியோகம் தடைபட்டது. மேலும், தாமிரபரணி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் செல்வதால் தூத்துக்குடிக்கு வரும் நீரின் அளவும் குறைந்து, சீரான குடிநீர் விநியோகம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.கடந்த 10 நாட்களாகக் குடிநீர் வராததால் தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்துத் தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் இன்று காலை தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் காலியான பானைகளை நடுரோட்டில் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 40 நிமிடங்கள் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த தென்பாகம் காவல் ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று மாலைக்குள் பாத்திமா நகர் பகுதிக்குக் குடிநீர் விநியோகம் சீர் செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
முட்டாள்Aug 10, 2026 - 12:27:29 PM | Posted IP 162.1*****
ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குப் பிறகு தினமும் குடிநீர் வழங்கும் திட்டம் மேயர் கொண்டு வருவாரு , அது உண்மையா ??
மேலும் தொடரும் செய்திகள்

பிரயாக்ராஜ் சிறப்பு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:18:11 AM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)



BalaAug 10, 2026 - 01:08:03 PM | Posted IP 104.2*****