» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வேன் மீது கார் மோதி விபத்து: வாலிபர் பலி, 3 பேர் படுகாயம்!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 11:57:42 AM (IST)
ஆறுமுகநேரி அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி இளங்காத்தா அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் லட்சுமணன் (40), ரங்கன் மகன் சுதாகர் (48) மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வினோத் (41) ஆகிய 3 பேரும் காரில் காயல்பட்டினத்தில் இருந்து ஆறுமுகநேரி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். காரை லட்சுமணன் ஓட்டியுள்ளார்.
ஆறுமுகநேரி சோதனைச் சாவடி அருகே கார் சென்றபோது, குரும்பூரில் இருந்து காயல்பட்டினம் நோக்கி எதிரே வந்த வேன் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வினோத் (41) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், காரில் இருந்த லட்சுமணன், சுதாகர் மற்றும் வேன் ஓட்டுநரான குரும்பூர் தண்ணீர் பந்தலைச் சேர்ந்த முருகன் மகன் மகேஷ் (35) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். நல்வாய்ப்பாக வேனில் இருந்த பயணிகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து தகவலறிந்த ஆறுமுகநேரி காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த 3 பேரையும் மீட்டுச் சிகிச்சைக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த வினோத்தின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வேன் ஓட்டுநர் மகேஷ் அளித்த புகாரின் பேரில், ஆறுமுகநேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரயாக்ராஜ் சிறப்பு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:18:11 AM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)



ஶ்ரீAug 8, 2026 - 01:54:15 PM | Posted IP 104.2*****