» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கருங்குளம் அருகே வாழைத் தோட்டத்தில் தீ விபத்து
புதன் 5, ஆகஸ்ட் 2026 9:43:20 AM (IST)
கருங்குளம் அருகே வாழைத்தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நாசமாகின.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கருங்குளம் அருகே திடீரென வாழைத் தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் தீ வேகமாகப் பரவியது.
இதில், சுமாா் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் தீயில் நாசமாகின. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், வாழைகள் எரிந்து நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் தீ மேலும் பரவாமல் அணைத்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரயாக்ராஜ் சிறப்பு இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:18:11 AM (IST)

ஆடை உற்பத்தியில் புதுமையைப் புகுத்த வேண்டும் : நெசவாளர்களுக்கு ஆட்சியர் பிரதாப் வேண்டுகோள்
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:53:02 PM (IST)

பராமரிப்புப் பணி: குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 8:42:23 AM (IST)

மயிலாடி சிற்பிகளின் கைவண்ணம்: ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை!
வியாழன் 6, ஆகஸ்ட் 2026 12:29:11 PM (IST)

தமிழக ரயில்வே வளர்ச்சிக்காகத் தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் தீர்மானம்!
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 5:54:50 PM (IST)

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 4, ஆகஸ்ட் 2026 10:43:32 AM (IST)



எப்படிAug 8, 2026 - 09:53:24 AM | Posted IP 104.2*****