» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரியில் 'கொங்கு நாடு உணவுத் திருவிழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு!
வெள்ளி 15, மே 2026 5:47:11 PM (IST)
தமிழகத்தின் பாரம்பரிய உணவுக் கலாசாரத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், கன்னியாகுமரி 'ஓட்டல் தமிழ்நாடு' அமுதகம் உணவகத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் "கொங்கு நாடு உணவுத் திருவிழா 2026" இன்று (மே 15) கோலாகலமாகத் தொடங்கியது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் அமுதகம் உணவகங்களில், 'நம் மண், நம் சுவை, நம் பாரம்பரியம்' என்ற கருப்பொருளில் இந்த விழா நடத்தப்படுகிறது. தமிழகத்தின் தனித்துவமான கொங்கு மண்டல உணவுகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இன்று (15.05.2026) தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 17) வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. கொங்கு மண்டலத்தின் இயற்கை மணமும், அசல் சுவையும் மாறாத பாரம்பரிய சமையல் முறைகளில் தயாரிக்கப்பட்ட பல்வேறு அசைவ மற்றும் சைவ உணவுகள் பொதுமக்களுக்குப் பரிமாறப்படுகின்றன.
தமிழர்களின் பாரம்பரிய உணவு மரபுகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக இந்தத் திருவிழா வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவுத் திருவிழா குறித்த மேலதிக விபரங்களுக்கு கன்னியாகுமரி ஓட்டல் தமிழ்நாடு மேலாளரை 9176995850 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)


