» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்ட குடிநீர் தேவைக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு!
வெள்ளி 1, மே 2026 10:36:50 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பேச்சிப்பாறை அணையிலிருந்து நாளை (மே 2) முதல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆளூர், தெங்கம்புதூர் மற்றும் பத்மநாபபுரம், கன்னியாகுமரி, கொல்லங்கோடு ஆகிய மூன்று நகராட்சிகள், 41 பேரூராட்சிகள் மற்றும் 92 ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் அத்தியாவசியத் தேவையின் அடிப்படையில், பேச்சிப்பாறை அணையிலிருந்து கோதையாற்றில் மே 2-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை (30 நாட்களுக்கு), வினாடிக்கு 40 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும். அணையின் நீர் இருப்பைப் பொறுத்து இந்த விநியோகம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)


