» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:35:13 PM (IST)

கன்னியாகுமரியில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, பொதுமக்களுக்கு இடையூறு இன்றி, தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை உறுதிப்படுத்தும் வகையில், துவரங்காடு பகுதியில் நடைபெற்று வரும் பறக்கும் படை வாகன சோதனையை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மாவட்டத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்த தகவல்கள்: மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் 21 பறக்கும் படைகளும், 24 நிலையான கண்காணிப்புப் படைகளும் 8 மணி நேரச் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றன.தேர்தல் நடத்தை விதிமீறல்களைத் தடுக்கவும், உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றவும் இப்படைகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
துவரங்காடு பகுதியில் நடைபெற்ற ஆய்வின் போது, வாகனங்களை நிறுத்திச் சோதனை செய்யும் முறை, ஆவணங்களைச் சரிபார்த்தல் மற்றும் சோதனையை வீடியோ பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், கைப்பற்றப்படும் பொருட்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பணப்புழக்கம் குறித்துப் பராமரிக்கப்படும் பதிவேடுகளையும் அவர் சரிபார்த்தார்.
வாகன சோதனையின் போது பொதுமக்களுக்குத் தேவையற்ற இடையூறுகள் ஏற்படாத வகையில் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், அதே சமயம் விதிமீறல்கள் நடைபெறாத வண்ணம் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாங்கண்ணி சிறப்பு ரயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
சனி 29, ஆகஸ்ட் 2026 5:36:37 PM (IST)

கன்னியாகுமரியில் மாபெரும் காத்தாடி திருவிழா: சுற்றுலாத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்!
சனி 29, ஆகஸ்ட் 2026 11:03:05 AM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.1041 கோடியில் நெடுஞ்சாலை பணிகள் : ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 12:04:00 PM (IST)

தோவாளையிலிருந்து கேரளாவுக்கு மலர்கள் கொண்டு செல்ல சிறப்பு 'மேமு' ரயில்: பயணிகள் சங்கம் கோரிக்கை!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 5:52:59 PM (IST)

தாயைக் கொன்று ஜாமீனில் வந்த வாலிபர் பக்கத்து வீட்டுப் பெண்ணைக் குத்திக் கொன்ற கொடூரம்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 8:48:42 AM (IST)


