» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு: ராட்சத பலூனை பறக்கவிட்டார் மாவட்ட ஆட்சியர்!

சனி 18, ஏப்ரல் 2026 4:02:30 PM (IST)



சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. 

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரா.சுகுமார் இந்த விழிப்புணர்வு நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ஜனநாயகக் கடமையை அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி 18 வயது நிரம்பிய முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் என அனைவரிடமும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

"தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா" என்ற மாவட்டத்தின் தேர்தல் இலச்சினையுடன், "100% தவறாமல் வாக்களிப்போம் வாரீர்", "தேர்தல் நாள் ஏப்ரல் 23", "எதிர்காலம் ஏற்றம் பெற வாக்களிப்போம்" போன்ற வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை ஆட்சியர் இரா.சுகுமார் பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கும் பேருந்து நிலையப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர், நடத்துநர்களுக்குத் தேர்தல் தொடர்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கி அவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நிகழ்வின் இறுதியில், தேர்தலில் கட்டாயம் வாக்களிப்போம் என்பது தொடர்பான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) லதா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory