» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மக்களோடு மக்களாக இருப்பவர்களுக்கே உங்கள் வாக்கு : தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:55:34 AM (IST)

தேர்தலுக்காக மட்டும் வருபவர்களைப் புறக்கணித்து, எப்போதும் மக்களோடு பணியாற்றும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்" எனத் தமிழக அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரத்தில் பேசினார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கீதா ஜீவன், இன்று மாநகராட்சியின் 48, 49, 50 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட சிஜிசி காலனி, செல்சீலினி காலனி, கால்டுவெல் காலனி, 3 சென்ட் அந்தோணியார்புரம், சாந்தி நகர் மற்றும் அமுதா நகர் ஆகிய பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரசாரத்தில், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
மக்களிடையே அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் தூத்துக்குடி தொகுதியில் 211 புதிய மின்மாற்றிகள், 13 நகர் நல அலுவலகங்கள், புதிய அங்கன்வாடிகள் மற்றும் ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார். சாலை, கால்வாய், மின்விளக்கு வசதிகள் என மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், தான் தேர்தலுக்காக மட்டும் வருபவள் அல்ல என்றும், மக்களின் இன்ப துன்பங்களில் எப்போதும் பங்கெடுப்பவள் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாகக் கொரோனா காலம் மற்றும் மழை வெள்ளக் காலங்களில் மக்களுக்காக முன்னின்று பணியாற்றியதை அவர் நினைவு கூர்ந்தார். மேலும், தமிழகத்தை வஞ்சிக்கத் துடிக்கும் ஒன்றிய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
பிரசாரத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சகாயராஜ், தேமுதிக மாவட்டச் செயலாளர் தயாளலிங்கம், மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயலாளர் ஜவஹர், விசிக மாவட்டச் செயலாளர் விமல் வங்காளி, எஸ்டிபிஐ மாவட்டச் செயலாளர் மைதீன் கனி, இந்திய கம்யூனிஸ்ட் மாநகரச் செயலாளர் தனலட்சுமி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 5:33:58 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)


கொத்தடிமைApr 17, 2026 - 12:36:20 PM | Posted IP 162.1*****