» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
விஜய் என்னைச் சந்திக்கவே இல்லை: த.வெ.க-வை விட்டு விலகிய அஜிதா ஆக்னல் குற்றச்சாட்டு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:39:53 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த நிலையில், இன்று தமிழக மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினார்.
கனிமொழி எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்த அஜிதா ஆக்னல், இன்று திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்தில் உள்ள திமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு தமிழக அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்துச் சால்வை அணிவித்து வாழ்த்துப் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அஜிதா ஆக்னல் பேசியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக விஜய்யின் மக்கள் இயக்கத்தில் பணியாற்றி வந்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கட்சிக்காக முழுமையாக உழைத்தேன். ஆனால், விஜய் என்னை ஒருமுறை கூடச் சந்திக்கவில்லை.
த.வெ.க-வில் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்காமல், விஜய் தனது நண்பரான நடிகர் ஸ்ரீநாத்துக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
தவறு செய்துவிட்டு மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கும், குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கும் மட்டுமே த.வெ.க-வில் சீட் வழங்கப்பட்டுள்ளது. சீட்டுக்காகக் கெஞ்சிக் கூத்தாடியும் எனக்கு வாய்ப்பு தரவில்லை.
திமுகவில் இணைந்த காரணம்: திமுகவில் பெண்களுக்கு உரிய மரியாதை இருக்கிறது. அதனால் தான் நான் இந்த இயக்கத்தில் இணைந்தேன். பெற்ற பிள்ளைகளுக்கே கடன் கொடுத்தேன் என்று சொல்லும் ஒரே தலைவர் விஜய் தான் என அவர் சாடினார். முன்னாள் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவரே விஜய்யைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
த வெ கApr 17, 2026 - 11:42:10 AM | Posted IP 162.1*****
கட்சிக்காக நன்றாக உழைத்தார் ஆனால் கட்சி பணத்தை வாங்கி கொண்டு முகம் தெரியவர்க்கு சீட் கொடுத்து விட்டது
SriiApr 17, 2026 - 12:24:38 AM | Posted IP 104.2*****
நீ ஒரு திமுக கைக்கூலி
சரிApr 16, 2026 - 09:38:46 PM | Posted IP 104.2*****
கடைசி வரை இன்பநிதி காலடியில் கொத்தடிமையாக இருந்து போகவும்.
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 5:33:58 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)


உண்மைApr 17, 2026 - 12:55:01 PM | Posted IP 172.7*****