» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வெளியூர் வேட்பாளர்களால் தொகுதிக்குப் பயன் இல்லை : அமைச்சர் கீதா ஜீவன் பிரச்சாரம்
வியாழன் 16, ஏப்ரல் 2026 11:37:20 AM (IST)

வெளியூர் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதால், தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு எவ்வித நன்மையும் தராது என்று திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் பிரச்சாரத்தில் பேசினார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் கீதா ஜீவன், மாநகராட்சிக்குட்பட்ட 9, 15, 16, 17 மற்றும் 18 ஆகிய வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ராஜகோபால் நகரில் பிரச்சாரத்தைத் தொடங்கி ராஜீவ் நகர், பி அண்ட் டி காலனி, மடத்தூர், சாமுவேல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பேசிய கீதா ஜீவன் குறிப்பிட்டதாவது: கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு வகையில் பயனடைந்துள்ளது. மக்களின் கோரிக்கைகளை ஏற்று இந்தப் பகுதிகளில் புதிய தார்ச்சாலைகள், பூங்காக்கள், ரேஷன் கடைகள் மற்றும் மினி பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்ட கட்டமைப்புப் பணிகள் தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்தார்.
மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையைப் பறிக்க பாஜக முயல்வதாகக் குற்றம் சாட்டினார். உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தென்னிந்திய மாநிலங்களைப் பழிவாங்கும் நோக்கில் புதிய நடைமுறைகளை மத்திய அரசு கொண்டு வரத் துடிப்பதாகச் சாடினார். மேலும், மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்பது உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்த அவர், தமிழகத்தின் பெருமையைக் காக்க ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என வலியுறுத்தினார்.
தொகுதியைப் பற்றித் தெரியாதவர்கள் சென்னையிலிருந்து வந்து போட்டியிடுவதாகவும், அவர்களுக்கு அளிக்கும் வாக்கு மக்களுக்கு எவ்வித நன்மையும் தராது என்றும் தவெக வேட்பாளரை மறைமுகமாக விமர்சித்தார். தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கவும், திமுக ஆட்சி தொடரவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு!
புதன் 15, ஏப்ரல் 2026 5:33:58 PM (IST)

வேளாங்கண்ணிக்கு கூடுதல் இரயில்களை இயக்க வேண்டும்: குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
புதன் 15, ஏப்ரல் 2026 3:54:55 PM (IST)


ManiApr 16, 2026 - 01:43:33 PM | Posted IP 104.2*****