» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழகத்தைப் புறக்கணிக்கும் பாஜக அரசுக்கு தேர்தலில் பாடம் புகட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
வியாழன் 16, ஏப்ரல் 2026 8:03:53 AM (IST)

தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வரும் மத்திய பாஜக அரசை, இந்தத் தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும்" எனத் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூருக்கு நேற்று புதன்கிழமை தேர்தல் பிரசாரத்திற்காக வருகை தந்த உதயநிதி ஸ்டாலினை, அமைச்சார் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுக வேட்பாளர் பை.மூ. ராமஜெயம் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
ஓட்டப்பிடாரம் பிரதான பஜாரில் திரண்டிருந்த மக்களிடையே உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தொழில் வளர்ச்சி: கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் ₹16,000 கோடி மதிப்பீட்டில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலை கொண்டு வரப்பட்டுள்ளது.
தொகுதியில் புதிய அரசு கலைக் கல்லூரி, ₹150 கோடி மதிப்பில் தருவைகுளம் மீன்பிடி துறைமுகம், சாலை வசதிகள் மற்றும் மேம்பாலங்கள் எனப் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய அவர்:
"முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட 'விடியல் பயணத் திட்டம்' மூலம் இன்று பெண்கள் மாதம் ₹900 முதல் ₹1,000 வரை சேமிக்கின்றனர். அதேபோல், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 1 கோடியே 31 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர்," எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தமிழக நலனில் அக்கறை காட்டாத மத்திய அரசுக்குத் தக்க பதிலடி கொடுக்க, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து திமுக வேட்பாளரை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் காரில் சோதனை:
கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதியை ஆதரித்துக் கயத்தாறு பகுதியில் பிரசாரத்தை முடித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்குள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்தார். பின்னர், மாலையில் இளையரசனேந்தல் சாலை வழியாகப் பிரசாரத்திற்குப் புறப்பட்டார்.
அப்போது, நிலையான கண்காணிப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையிலான போலீசார், உதயநிதி ஸ்டாலின் கார் மற்றும் அவருடன் வந்த வாகனங்களை மறித்துச் சோதனை செய்தனர். காரில் ரொக்கப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் ஏதேனும் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சோதனையில் எதுவும் சிக்காத நிலையில், அவர் பிரசாரத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோடை விடுமுறையை முன்னிட்டுச் சிறப்பு ரயில்கள் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:38:48 AM (IST)

தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து செயல்படும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்
புதன் 29, ஏப்ரல் 2026 5:40:23 PM (IST)

கள்ளக்காதலை எதிர்த்தவர் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - பத்மநாபபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 29, ஏப்ரல் 2026 5:00:02 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மதுக்கடைகள் மூடல் - ஆட்சியர் உத்தரவு
புதன் 29, ஏப்ரல் 2026 3:54:51 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:20:33 AM (IST)

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் பல லட்சம் மோசடி?அஞ்சல்துறை அதிகாரிகள் விசாரணை
சனி 25, ஏப்ரல் 2026 4:04:55 PM (IST)


