» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
ஊருக்குள் நுழைந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி!
வியாழன் 18, செப்டம்பர் 2025 3:39:13 PM (IST)

குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நேரத்தில் ஊருக்குள் நுழைந்த 20-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.
குமரி மாவட்டத்தில் அடுத்தடுத்து டாரஸ் லாரிகளால் உயிர் பலிகள் நிகழ்ந்ததை தொடர்ந்து, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்லும் லாரிகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.கனிம வள சரக்கு காலி வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும். கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் காலை 7- மணி முதல் காலை 10 -மணி வரையிலும், பிற்பகல் 3- மணி முதல் இரவு 6- மணி வரையிலும் மாவட்டத்துக்குள் நுழைய தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது
இந்த நிலையில் கன்னியாகுமரி அருகே மணக்குடி பகுதியில் உதவி காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான போக்குவரத்து போலீசார் இன்று காலை அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். நேர கட்டுப்பாட்டை மீறி ஊருக்குள் நுழைந்த 20-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டு அபராதம் விதித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நலம் காக்கும் ஸ்டாலின் முழுஉடல் பரிசோதனை முகாம்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 3, ஜனவரி 2026 4:34:45 PM (IST)

தி.மு.க. ஆட்சியில்தான் கோவில் கும்பாபிஷேகம் அதிகளவில் நடத்தப்பட்டுள்ளது : சேகர்பாபு பெருமிதம்
வெள்ளி 2, ஜனவரி 2026 5:46:42 PM (IST)

குடும்ப பிரச்சனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: நாகர்கோவிலில் பரிதாபம்!
வெள்ளி 2, ஜனவரி 2026 4:09:08 PM (IST)

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
வெள்ளி 2, ஜனவரி 2026 3:53:35 PM (IST)

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் வேகம் இன்று முதல் அதிகரிப்பு!
வியாழன் 1, ஜனவரி 2026 12:47:20 PM (IST)

கன்னியாகுமரியில் 2025-ம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!
புதன் 31, டிசம்பர் 2025 12:00:25 PM (IST)

