» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வ.உ.சி. துறைமுகத்தில் காற்றாலை, சோலார் மூலம் 32½ லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி!

சனி 5, ஜூலை 2025 8:47:32 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சூரிய மின்நிலையம், காற்றாலை மூலம் 32½ லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சுத்தமான மற்றும் பசுமை துறைமுகமாக மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதன்படி வ.உ.சி. துறைமுகத்தில் 5 மெகாவாட் தரையில் பொருத்தப்பட்ட சூரிய மின்நிலையம், 2 மெகாவாட் காற்றாலை மின்நிலையம், 1.04 மெகாவாட் மேற்கூரை சூரிய மின்நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் துறைமுகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் வ.உ.சி துறைமுகம் 35 லட்சத்து 62 ஆயிரத்து 839 யூனிட் மின்சாரத்தை சூரிய மின் ஆலை மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்து உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 27 லட்சத்து 36 ஆயிரத்து 229 யூனிட்டுன் ஒப்பிடும் போது, 30 சதவீதம் அதிகம் ஆகும். இது வ.உ.சி. துறைமுகத்தின் நிலைத்தன்மை மற்றும் சுத்தமான எரிசக்தி ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதற்கான உறுபாட்டை பிரதிபலிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


மக்கள் கருத்து

முட்டாள்Jul 5, 2025 - 12:43:48 PM | Posted IP 162.1*****

செய்திகளை படித்தால் பசுமையாக சுத்தமான துறைமுகமாம் . நிஜத்தில் துறைமுக ரோட்டில் போனால் அங்கங்கே தூசிகள் , நிலக்கரி மண் காற்றில் பறக்கும் மணல்கள், சாலையில் மண் தேங்கி இருக்கிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory