» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அகஸ்தீஸ்வரம், இராஜாக்கமங்கலம் பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகள் : ஆட்சியர் ஆய்வு
சனி 24, மே 2025 10:36:54 AM (IST)

அகஸ்தீஸ்வரம் மற்றும் இராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் கொட்டாரம் பேரூராட்சி, பஞ்சலிங்கபுரம் ஊராட்சி மற்றும் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் - தமிழ்நாடு முதலமைச்சர் குடும்ப பெண்களும் தங்கள் குடும்பத்தினை பொருளாதாரத்தில் முன்னேற்ற பாதையில் பங்களிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடும், ஏழை எளிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், சுய உதவி குழுக்கள் மூலம் பல்வேறு கடனுதவிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பல்வேறு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள், வேளாண் பொருட்கள், கைவினை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்கள் தயாரித்து குறு சிறு தொழில்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் செயல்பட்டு வரும் சுயஉதவிக்குழுக்களுக்கு பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கி, அவர்களை தொழில் முனைவோராக பல்வேறு விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டு வாழ்வாதாரத்தினை உயர்த்தி வருகிறார்கள்.
அதன்ஒருபகுதியாக கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் செயல்படும் பிச்சி மகளிர் சிறப்பு சுய உதவிக்குழுவினரால் மேற்கொள்ளப்படும் சிலை தயாரிக்கின்ற தொழிலினை ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான நிதியை பெற்று வழங்குவதோடு தயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
மேலும், கொட்டாரம் தாழம்பூ மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயாரிக்கப்படும் பிரண்டை ஊறுகாய், உல்லன் நூல் ஆடைகள் தயாரித்தல், இடியாப்பம், சப்பாத்தி மற்றும் Catering உணவு பொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் தொழில் நடவடிக்கைகளை ஆய்வு செய்து கேட்டறியப்பட்டது. மேலும் அவர்களின் தொழில் நடவடிக்கையினை பாராட்டி, அவற்றை விரிவுபடுத்துவதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பஞ்சலிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட சாய்பாபா மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் 5 பேர் இணைந்து தையல் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் Catering தொழில் புரிகின்ற ஸ்ரீ கிருஷ்ணா மகளிர் சுயஉதவிக்குழு அவர்களின் தொழிலினையும் விரிவுபடுத்த ஓரிட சேவை மைய நிதியிலிருந்து தொழில் கடன் வழங்கி உரிய வகையில் தொழில் முதலீடு செய்து பொருளாதார வளர்ச்சி பெறுவதற்குரிய ஆலோசனைகள் வழங்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணக்குடி கடலோர கிராமத்தில் தேங்காய் ஓடு மற்றும் தேங்காய் நார் ஆகியவற்றின் மூலம் கைவினை பொருட்கள் தயாரிக்கின்ற சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் தொழில் நடவடிக்கைகளை ஆய்வு செய்து தகுந்த தொழில் கூடம் அமைக்கவும், இணைய வழி சந்தை வாய்ப்பினை ஏற்படுத்தி அதன் வாயிலாக தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துமாறு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வுகளில் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பத்ஹூ முகம்மது நசீர், உதவி திட்ட அலுவலர் (வாழ்வாதாரம்) பொன் குமார், மாவட்ட வளப்பயிற்றுநர் குளோரி, வட்டார இயக்க மேலாளர் மற்றும் சமுதாய அமைப்பாளார், சுய உதவி குழு ஊறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவிலில் மெகா வேலைவாய்ப்பு முகாம்: அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு!
சனி 24, மே 2025 3:30:48 PM (IST)

டெய்லரை குத்திக் கொன்ற ஓட்டல் ஊழியர் கைது: பேண்ட்டை தைக்க மறுத்ததால் வெறிச்செயல்!
சனி 24, மே 2025 8:47:27 AM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் படகு ஓட்டுநர் பயிற்சி தொடக்கம்!
வெள்ளி 23, மே 2025 5:52:30 PM (IST)

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 23, மே 2025 5:18:23 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை : போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 23, மே 2025 12:39:23 PM (IST)

குமரி பகவதியம்மன் கோயில் வைகாசித் திருவிழா: கால்நாட்டு விழா
வெள்ளி 23, மே 2025 12:36:55 PM (IST)
