» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பத்துகாணி மலைவாழ் மக்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்
செவ்வாய் 1, ஏப்ரல் 2025 12:18:42 PM (IST)

குமரி மாவட்டம் பத்துகாணி மலைவாழ் மக்களின் வசதிக்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் "முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு மக்களின் அவசர மருத்துவ பயன்பாட்டிற்காக 108 ஆம்புலன்ஸ் சேவையை துவங்கினார்கள். பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றபடி படிப்படியாக ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை உயர்த்தி தற்போது தமிழ்நாட்டிற்குட்பட்ட பகுதிகள் முழுவதும் 1353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் மொத்தம் 17, 108 ஆம்புலன்ஸ் அவசர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் 12 அடிப்படை உயிர் காக்கும் கருவிகள் கொண்ட ஆம்புலன்ஸ்கள், நான்கு அதி நவீன உயிர்க்காக்கும் வசதிகள் கொண்ட ஆம்புலன்ஸ்களும், ஒரு பச்சிளம் குழந்தைகளுக்கு உண்டான ஆம்புலன்சும் இயக்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் வருடம் 25279 பொதுமக்கள் ஆம்புலன்ஸ் சேவையில் பயன்பெற்றுள்ளார்கள். தற்போது கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டத்துக்குட்பட்ட பத்துக்காணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மலைவாழ் மக்களின் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் ஒன்று கூடுதலாக மாவட்டத்தில் அதிகரிக்கபட்டு, கடந்த 29.03.2025 (சனிக்கிழமை) அன்று மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த கூடுதலாக இயக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸில் உயிர் காக்கும் அனைத்து மருத்துவ உபகரணங்கள் மருந்துகள் உள்ளன. பத்துக்காணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றியுள்ள மலைவாழ் மக்கள் மிகவும் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரசவித்த பின் குழந்தைகளின் செவித்திறன்களை நன்கு ஆராய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
சனி 5, ஜூலை 2025 12:41:12 PM (IST)

திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மர்ம மரணம் : தாய் புகார் - போலீஸ் விசாரணை!!
சனி 5, ஜூலை 2025 10:48:06 AM (IST)

இரணியல் அரண்மனை பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது : ஆட்சியர் அழகுமீனா தகவல்
வெள்ளி 4, ஜூலை 2025 5:36:19 PM (IST)

கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
வெள்ளி 4, ஜூலை 2025 10:40:08 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)
