» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புதிய பாலம், சாலைப் பணிகள்: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்!

திங்கள் 4, மார்ச் 2024 3:54:30 PM (IST)



மோதிரமலை முதல் குற்றியார் வரை ரூ.5 கோடி மதிப்பில் புதிய பாலப்பணிகள், பேச்சிப்பாறை முதல் மூக்கறைக்கல் வரை ரூ.3.37 கோடி மதிப்பில் சாலை சீரமைக்கும் பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய பாலம் அமைக்கும் பணி மற்றும் சாலை சீரமைக்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் , மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில், மாவட்ட வன அலுவலர் (பொ) இளையராஜா, முன்னிலையில் இன்று துவக்கி வைத்து தெரிவிக்கையில் "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருவதோடு, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வளர்ச்சி திட்டப்பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள்.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட காணி மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலைப்பகுதியில் கிடைக்கும் அரியவகை தேன், கைவினைபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சுயதொழில்புரிய கடன் திட்ட உதவிகள், மின்வசதி இல்லாத பகுதிகளில் குடியிருக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு சோலார் மின்வசதி, பேருந்து வசதி இல்லாத கிராமங்களிலிருந்து கல்வி பயில வரும் மாணவ மாணவியர்களுக்கு இலவச படகு சவாரி, உண்டு உறைவிட பள்ளி, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மலைவாழ் காணி பழங்குடியின மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நடத்தப்பட்ட உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் பேச்சிப்பாறை முதல் கோதையாறு சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளதாகவும், இச்சாலைகளை சீரமைத்து தந்திட வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். மலைவாழ் மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் பங்களிப்பான ரூ.3.3 கோடி மதிப்பில் வனப்பொறியாளர் திருச்சி கோட்டம் அவர்களிடம் பணியை மேற்கொள்ள ஒப்படைத்தன் அடிப்படையில் பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் முதல் கோதையாறுக்கு 1 கி.மீட்டர் முன்பு மூக்கறைக்கல் வரை சாலை மேம்படுத்தும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

அத்தோடு மட்டுமல்லமால் மலைவாழ் காணி பழங்குடியின கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2021-2022 -ன் கீழ் ரூ.5 கோடி மதிப்பில் மோதிரமலை முதல் குற்றியார் வரை சுமார் 49.80 மீட்டர் அளவில் பாலம் அமைக்கும் பணியும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இப்பணிகள் அனைத்து விரைந்து முடித்து மலைவாழ் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் ஜாண்சன், ரெமோன் உதவி பொறியாளர் தனசேகர், உதவி கோட்டப்பொறியாளர் விஜயா, வனத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory