» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மேலாத்தூரில் ரூ.4.83 கோடியில் கால்வாய் மேம்பாட்டு பணி தொடக்கம்!

வெள்ளி 1, மார்ச் 2024 7:58:19 AM (IST)

மேலாத்தூரில் ரூ.4.82 கோடியில் ஆத்தூரான் கால்வாய் புனரமைப்புப் பணிகளை அமைச்சர் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். 

தாமிரபரணி ஆற்றில் ஆத்தூரான் கால்வாயின் கீழ் 2 குளங்களும் 13 நேரடி மடைகளும் உள்ளன. இதன் மூலம் 460 ஏக்கா் பரப்பில் வாழை, நெல், வெற்றிலை பயிரிடப்படுகின்றன. இக்கால்வாயில் 12.70 கி.மீ. தொலைவை ரூ.4.82 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்த தமிழ்நாடு நீா்வளத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 

இதில் 15 மடைகளை மறுகட்டுமானம் செய்வது, மஞ்சுவிளையில் பாலம் கட்டுதல், சேதுக்குவாய்த்தான் மதகு, ஆத்தூா் தலைமதகு மற்றும் 10 படித்துறைகளை புனரமைத்தல், கரைகளை கல்தளம் கொண்டு புனரமைத்தல் ஆகிய பணிகள் அடங்கும். அமைச்சர் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி இப்பணிகளை நேற்று தொடக்கி வைத்தாா். 

தாமிரபரணி வடிகால் கோட்ட செயற்பொறியாளா் மாரியப்பன், உதவிச் செயற்பொறியாளா்கள் ஆதிமூலம், ஆவுடைநாயகம், தூத்துக்குடி ஆா்.டி.ஓ. பிரபு, திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஆத்தூா் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்கச் செயலா் ராஜகோபால், பொருளாளா் மூக்காண்டி, துணைத்தலைவா் சுப்பிரமணியன், ஆத்தூா்குளம் கீழ்ப்பகுதி விவசாயிகள் சங்கத்தலைவா் செல்வம், மேலாத்தூா் ஊராட்சி துணைத்தலைவா் பக்கீா்முகைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory