» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குருந்தன்கோடு பகுதியில் ரூ.1 கோடி வளர்ச்சித்திட்ட பணிகள் : ஆட்சியர் ஆய்வு!

செவ்வாய் 20, பிப்ரவரி 2024 4:58:51 PM (IST)



குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார். 

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து, அப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட்டு துறை அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது. குறிப்பாக ரூ.50.00 இலட்சம் மதிப்பில் முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வெள்ளிச்சந்தை ஊராட்சிக்குட்பட்ட உன்னங்குளம் முதல் மணவிளை வரை தார்சாலை அமைக்கும் பணிகள், ரூ.15.00 இலட்சம் மதிப்பில் முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட ஊராட்சி அலுவலகம் முதல் சொசைட்டி சாலை வரை சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட கொடுப்பைக்குழி பகுதியில் ரூ.14 இலட்சம் மதிப்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கான்வாடி கட்டிடத்தையும், ரூ.9.86 இலட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஒட்டங்குளம் பகுதியில் ஓடைகள் தூர்வாரும் பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, பணியாளர்களின் வருகை பதிவேட்டினைஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

ரூ.11.97 இலட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள அங்கான்வாடி கட்டிடத்தையும் பார்வையிட்டதோடு, கட்டிடத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார். ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹிம், குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory