» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நலத்திட்ட உதவிகள் : அமைச்சர் வழங்கினார்!

வெள்ளி 16, பிப்ரவரி 2024 4:29:10 PM (IST)



குமரி மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.02.2024) சென்னை கலைவாணர் அரங்கத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் தக்கலை ஸ்ரீ லெட்சுமி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில் :-

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் நலன் கருதியும், தமிழ்நாட்டுக்குட்பட்ட அனைத்து பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு, கடந்த சில நாட்களுக்கு முன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தினை துவக்கி வைத்தார்கள். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கூலித்தொழில் செய்யும் ஏழை எளிய மக்களின் வசதிக்குகேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகாமையிலேயே தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் வழிவகை செய்கிறது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 1,2,3 வட்டங்கள் அடங்கிய ஆளூர் பகுதியில் கடந்த 22.11.2023 அன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 27.12.2023 முதல் 12.01.2024 வரை அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி மற்றும் புற நகர் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகளை பெற சிறப்பு முகாம்கள் அனைத்து வருவாய் வட்டங்களிலும் மொத்தம் 78 முகாம்கள் நடத்தப்பட்டது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 8,403 மனுக்களும், இதர மனுக்கள் 24,198 மனுக்கள் என மொத்தம் 30,201 மனுக்கள் பெறப்பட்டு அவற்றில் 16,500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற முகாம்களில் வருவாய் துறை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பேரூராட்சிகள், மாவட்ட தொழில் மையம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டம், தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் துறை (சமூக பாதுகாப்புத்துறை), ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றுதல், புதிய மின் இணைப்பு, புதிய மின்கம்பிகள் மாற்றுதல், பேட்ரியால் இயங்கும் சக்கர நாற்காலி, பராமரிப்பு உதவித்தொகை, தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உதவி, புதிய பதிவு அட்டை, பயனாளிகள் தமாகவே வீடு கட்டி கொள்வதற்கான ஆணை, கருணை அடிப்படை பணி, வங்கிக்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு கண்டு, இன்று சென்னை கலைவாணர் அரங்கத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். அதனடிப்படையில் இன்று தக்கலை ஸ்ரீ லெட்சுமி மஹாலில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 285 பயனாளிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழும், 310 பயனாளிகளுக்கு இதர திட்டம் என மொத்தம் 595 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்படும் மக்களைத்தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, புதுமை பெண் திட்டம், காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டுமென பொதுமக்களாகிய உங்களிடம் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், பேசினார்கள்.

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த், பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.தமிழரசி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, தனித்துணை ஆட்சியார் (ச.பா.தி) குழந்தைசாமி, பத்பநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள் சோபன், பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் லெனின், திருவிதாங்கோடு பேரூராட்சி தலைவர் நசீர், மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சுப்பையா, மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் மரு.சிவசங்கரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலஅலுவலர் கனகராஜ், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் விஜய லெட்சுமி, மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, வட்டாட்சியர்கள் முருகன் (கல்குளம்), அனில்குமார் (அகஸ்தீஸ்வரம்), குமாரவேல் (விளவங்கோடு), நகராட்சி ஆணையர்கள், அனைத்து துறை அலுவலர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள், பயனாளிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory