» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு மருத்துவமனையில் ரூ.2.43 கோடியில் அதி நவீன சி.டி.ஸ்கேன் எந்திரம்: கனிமொழி எம்.பி. இயக்கி வைத்தார்

வெள்ளி 16, பிப்ரவரி 2024 8:09:43 AM (IST)



திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.2.43 கோடியில் அதி நவீன சி.டி.ஸ்கேன் எந்திரத்தை  கனிமொழி எம்.பி. இயக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.2.43 கோடி செலவில் புதிதாக அதிநவீன சி.டி.ஸ்கேன் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் லட்சுமிபதி தலைமை தாங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு சி.டி.ஸ்கேன் எந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவ ஆனந்தி, துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன் ரவி, மருத்துவ அலுவலர் பாபநாசகுமார், கோட்டாட்சியர் குருசந்திரன், தாசில்தார் பாலசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory