» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மக்கள் தொடர்பு முகாமில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்!

புதன் 14, பிப்ரவரி 2024 5:03:08 PM (IST)



வடக்கூர் வருவாய் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில் தோவாளை வட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட வடக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (14.02.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி முன்னிலையில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, பேசுகையில்-

தமிழ்நாடு அரசு பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் மாவட்டத்திற்குட்பட்ட ஒவ்வொரு வருவாய் கிராமங்களிலும் முதல் மற்றும் இரண்டு கட்டங்களாக சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தி பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று தகுதியான பயனாளிகளுக்கு உடனடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று தோவாளை வட்டம், ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட வடங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இம்முகாமின் நோக்கம், அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் அறிந்து பயன்பெறுவதே ஆகும். குறிப்பாக, குடிநீர் வசதி, பட்டா வழங்குதல் , பட்டா பெயர் மாற்றம் செய்தல், விதவை சான்றிதழ், முதிர்கன்னி ஓய்வூதியத்தொகை, ஆதரவற்றோர் விதவை சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிவர்த்திசெய்வதே ஆகும். மேலும் குடும்ப அட்டையின் வகை மாற்றுவதற்கான மனுக்கள் அதிகமாக வருகிறது. மேலும் வீட்டுமனை பட்டா மனுக்களும் அதிகளவில் வருகிறது. தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். வீடு தொடர்பான மனுக்களுக்கு மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் மூலம் தகுதியான பயனாளிகளுக்கு மானியத்துடன் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

பல்வேறு புதுப்புது திட்டங்கள் வருவாய் துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறைகளின் வாயிலாக வெளியிடப்படும் திட்டங்கள் பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் இத்திட்டங்களில் பயன் அடைவார்கள்.

மேலும் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டமானது மாதத்தின் 4-வது புதன்கிழமை அன்று ஒரு வட்டத்தை தேர்ந்தெடுத்து, அங்கு அனைத்து உயர்அலுவலர்களும் தங்கியிருந்து, உங்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு உங்களது வீடுகளுக்கே நேரிடையாக வந்து, குறைகளை கேட்டறிந்தும், ஆய்வு மேற்கொள்ளப்படும். பெறப்படும் மனுக்களில் உடனடி தீர்வு மேற்கொள்ள வேண்டிய மனுக்களுக்கு அங்கேயே நலத்திட்ட உதவிகள் வழங்கியும், தகுதியான மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படுகிறது.

எனவே பொதுமக்களாகிய அனைவரும் தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்கள்.

முகாமில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி முன்னிலையில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைபட்டா 3 பயனாளிகளுக்கும், தனிப்பட்டா 8 பயனாளிகளுக்கும், நலிந்தோர் உதவித்தொகை 18 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இடுபொருள்கள், வேளாண்மைத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்கள், மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு இருசக்கர நாற்காலி, பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் 2 மாணவிகளுக்கு கண் கண்ணாடி, ஆரல்வாய்மொழி தேர்வுநிலை பேரூராட்சி சார்பில் 5 பயனாளிகளுக்கு தெருவோர வியாபாரி அடையாள அட்டையும் வழங்கினார்கள்.

முன்னதாக, வடக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பொதுசுகாதாரத்துறை, வாக்காளர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர செயல்முறை விளக்கம் கால்நடை பராமரிப்புத்துறை, பட்டுப்புழு வளர்ப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கபட்டிருந்த பல்துறை பணிவிளக்க முகாமினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், பார்வையிட்டார்கள்.

மேலும் இம்முகாமில் சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், குழந்தை பாதுகாப்புத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளை சார்ந்த அலுவலர்கள் தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்து திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள்.

நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அ.ஆல்பர்ட் ராபின்சன், தோட்டக்கலை துணை இயக்குநர் யோ.ஷீலாஜாண், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் குழந்தை சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் மரு.சிவசங்கரன், மாவட்ட வேலைவாய்ப்பு துறை அலுவலர் ஜெரிபா இம்மானுவேல், மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சகிலா பானு, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் கனகராஜ், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா, தனித்துணை ஆட்சியர் (ஆதிதிராவிடர் நலன்) கனகராஜ், மாவட்ட கல்வி அலுவலர் மோகன், தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துகுமார், துறை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory