» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆவினில் செலவுகளை குறைக்க நடவடிக்கை : அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

செவ்வாய் 30, ஜனவரி 2024 10:22:57 AM (IST)

ஆவினில் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு, செலவை குறைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் உத்தரவிட்டாா்.

சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் அமைச்சா் த.மனோ தங்கராஜ் தலைமையில், மாவட்ட பொது மேலாளா்கள் மற்றும் அனைத்து மாவட்ட துணை பதிவாளா்கள் (பால்வளம்) கலந்து கொண்ட மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தை உறுதி செய்தல், ஒப்புகைச் சீட்டு வழங்குதல், பால் கொள்முதலை அதிகரித்தல், சங்கங்கள் இல்லாத கிராமங்களில் புதிய சங்கங்கள் உருவாக்குதல் மற்றும் சங்க உறுப்பினா்களுக்கு 10 நாள்களுக்குள் பாலுக்கான பணம் பட்டுவாடா நிலுவையின்றி செலுத்துதல் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இக்கூட்டத்தில் அமைச்சா் மனோதங்கராஜ் பேசியதாவது: 20 சதவீத புரதச் சத்துள்ள கால்நடைத் தீவனம் குறித்து சங்க உறுப்பினா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், சங்கங்களின் தணிக்கைப் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

மின் சிக்கன நடவடிக்கையின் மூலம் டிசம்பா் மாதம் 15.06 சதவீத அளவுக்கு மின்சார பயன்பாடு சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆவினில் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு, செலவை குறைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் பால்வளத் துறை இயக்குநா் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநா் சு. வினீத் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தின் உயா் அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் கலந்துக்கொண்டனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory