» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிப்.3ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்

திங்கள் 29, ஜனவரி 2024 7:54:54 PM (IST)

நாகர்கோவில் மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் வருகிற பிப்.3ஆம் தேதி சனிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்  நடைபெற உள்ளது. 

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகர்கோவில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 03.02.2024 சனிக்கிழமை அன்று நாகர்கோவில் மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, செவிலியர் படித்த வேலைநாடுநர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது பணிக் காலியிடங்கள் தொடர்பான விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 01.02.2024 தேதி மதியம் 02.00 மணிக்குள் அனுப்புமாறும், இம்மின்னஞ்சலில் அனுப்பும் நிறுவனங்களுக்கு CONFIRMATION MAIL அனுப்பப்படும் Confirmation Mail அனுப்பப்படும் நிறுவனங்கள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளமுடியும்.

இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று பதிவு செய்யாமல் வரும் வேலையளிக்கும் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாது என்ற விவரமும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய சமூகவலைதளமான TELEGRAM CHANNEL ல் DECGCNGL என்ற குழுவில் பகிரப்பட்டுள்ள Google Form ல் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்புமாறும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் "தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்” Tamil Nadu Private Job Portal” (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும், கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

எனவே, இச்சேவையை வேலைநாடுநர்களும், வேலையளிப்போர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory