» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வெள்ளி 15, டிசம்பர் 2023 10:12:06 AM (IST)

நாகர்கோவிலில் போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது ரோந்து போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் போதிய பாதுகாப்பு இன்மையால், தினசரி சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது. தனியாக நடந்து செல்வோரிடம் செல்போனை தட்டி பறிப்பது. பெண்களுக்கு பாலியல் தொல்லை. திருட்டு என்று அத்துமீறல்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. 

இதுபோன்ற அசம்பாவித சம்பங்களை கண்டறியும் வகையில், வடசேரி, அண்ணா பஸ் நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்கள் அனைத்தும் சரியாக வேலை செய்வது இல்லை என்று தெரிகிறது. சில கேமராக்கள் தரையை பார்த்து தொங்கியபடியும் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு சுமார் 9.30 மணி அளவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு தடம் எண் 1 புறப்பட்டது. அப்போது பஸ்சில் தலைக்கேறிய போதையில் மர்ம நபர் ஒருவர் ஏறினார். திடீரென மர்ம நபர் ஆபாச வார்த்தைகளால் திட்டி தீர்த்துக் கொண்டு இருந்தார்.

பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஸ்டேடியம் அருகே வந்தபோது, டிக்கெட் கொடுத்து விட்டு கண்டக்டர் காசு கேட்டார். உடனே போதையில் இருந்த மர்ம நபர், என்னிடமே காசு கேட்கிறாயா? நாளை இதே இடத்தில் மறித்து உன்னையும் தாக்குவேன், பஸ்சையும் உடைப்பேன் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து ஆபாசமாக சரமாரியாக திட்ட தொடங்கினார். இது பஸ்சில் இருந்த பலருக்கும் எரிச்சலை கொடுத்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். தொடர்ந்து டிரைவர், கண்டக்டர் ஆகியோர் சேர்ந்து, போதை நபரிடம் டிக்கெட்டை திரும்ப தந்து விட்டு செல்லும்படி கூறினர். 

ஆனால் டிக்கெட்டை போதை நபர் தர மறுத்து விட்டார். மாறாக மீண்டும் கண்டக்டரை ஆபாசமாக திட்டி தீர்த்தபடி பஸ்சில் இருந்து இறங்கி விறு விறுவென நடத்து சென்றார். இதனால் வேறுவழியின்றி பஸ்சை டிரைவர் எடுத்து சென்றார். இதற்கிடையே நடந்து சென்ற போதை ஆசாமி, அந்த வழியாக வந்த பைக்கை மறித்தார். தொடர்ந்து பைக்கை ஓட்டி வந்தவர்களிடமும் தகராறில் ஈடுபட்டார். எனவே போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் நபர்கள் மீது ரோந்து போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory