» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திக்காணங்கோடு பகுதியில் ரூ.39 இலட்சம் வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம்!

புதன் 13, டிசம்பர் 2023 9:59:18 AM (IST)



திக்காணங்கோடு ஊாட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.39 இலட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் திக்காணங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்து தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கிராமப்புற மக்களின் தேவை அறிந்து அவர்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் உடன்குடன் நிறைவேற்றி வருகிறார்கள். 

அதன் அடிப்படையில் திக்காணங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் ரூ.39 இலட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கான பணியை இன்று துவக்கி வைத்தார்கள். இப்பணிகள் விரைந்து முடிவுற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

மேலும் நாகர்கோவில் முதல் திங்கள் நகர் பேருந்து நிலையம் வரை சென்று கொண்டிருந்த பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதை சடையமங்கலம் ஊராட்சி தலைவர் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் போக்குவரத்துறை மேலாளரிடம் அறிவுறுத்தியதன் அடிப்படையில் சடையமங்கலம் வழியாக சென்று கொண்டிருந்த நாகர்கோவில் திங்கள் நகர் வழித்தட பேருந்து சேவை, இன்று துவக்கி வைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தக்கலை ஊராட்சிஒன்றிய குழு தலைவர் அருள் ஆண்டனி, ஊராட்சி தலைவர்கள் அருள்ராஜ் (சடையமங்கலம்), ராஜம் (திக்காணங்கோடு) , அருனாந்த ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory