» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கலந்தாய்வு!

செவ்வாய் 12, டிசம்பர் 2023 5:27:22 PM (IST)



கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அகஸ்தீஸ்வரம், தோவாளை, இராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, தக்கலை, கிள்ளியூர், திருவட்டார், முன்சிறை, மேல்புறம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் சாலை பணிகள், குடிநீர் வசதிகள், சுகாதார பணிகள், குற்றியாறு தச்சமலை பகுதியில் நடைபெற்றுவரும் பாலப்பணிகள், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் சாலைப்பணிகள், நபார்டு திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் வளரச்சித்திட்டபணிகள், தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் சாலைப்பணிகள், பிரதம் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், முடிவடைந்த பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்ககம், நீலப்புரட்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்-II, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டம், உயிர் நீர் இயக்கம் திட்டங்கள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதுடன் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் பி.பாபு, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory