» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கோணம் நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் திடீர் ஆய்வு!

வெள்ளி 8, டிசம்பர் 2023 11:06:21 AM (IST)



கோணம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் கோணம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், திடீர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கன்னியாகுமரி மண்டலம் கோணம்-1 மற்றும் கோணம் -2 கிட்டங்குகளை திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேற்காணும் இரண்டு கிடங்குகளையும் ஆய்வு மேற்கொண்டபோது இருப்பு பதிவேட்டின்படி அத்தியாவசிய உணவு பொருட்கள் சரிபார்க்கப்பட்டது. 

மேலும் பொது விநியோக திட்டத்திற்கு விநியோகம் செய்யப்படும் அரிசி மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களின் எடை மற்றம் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மண்டலத்திலிருந்து பெறப்பட்ட 517.449 மெ.டன் பழுப்புநிற மிகை அரிசி இருப்பில் உள்ளது தொடர்பாக துறை அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டதோடு, குடோனில் இருப்பில் வைக்கப்பட்டுள்ள பழுப்புநிற மிகை அரிசியை இ-டென்டர் மூலம் 08.12.2023 அன்று விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்பொருள் வாணிபகழக மேலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அமுதம் நியாய விலைக்கடைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை சமர்சீர் செய்து லாரிகளில் அனுப்பி வைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, நுகர்பொருள் வாணிய கழக மண்டல மேலாளர் செல்ல பாண்டியன், துணை மேலாளர் (தரக்கட்டுபாடு) பிச்சை முருகன், கண்காணிப்பாளர் முருகன், அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory