» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ கடனுதவி: மேலாண்மை இயக்குநர் தகவல்

புதன் 29, நவம்பர் 2023 3:17:35 PM (IST)

விவசாய  நிலம்  வாங்குவதற்கு  தாட்கோ மானியத்துடன் கிரையத் தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற்று வாங்கலாம் என்று தாட்கோ மேலாண்மை  இயக்குநர் க.சு.கந்தசாமி   தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்  (தாட்கோ)  மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில்  ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியின வகுப்பினை  சார்ந்தவர்களுக்கு விவசாய  நிலம்  வாங்குவதற்கு  தாட்கோ மானியத்துடன்   கிரையத் தொகையினை  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. 

நிலமற்ற ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியின விவசாய  தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு  விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50% அல்லது அதிகப்பட்சம் ரூ.5.00 இலட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில்  விலக்களிக்கப்படுகிறது.

தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத் தொகை போக எஞ்சிய கிரையத் தொகையினை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலியிருந்து பயனாளிகளுக்கு  6%மிககுறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினர்  தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம்  செய்ய  வேண்டும் (www.tahdco.com )  மேலும்  விபரங்களுக்கு  தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி  விவரம்  பெற்று  உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என தாட்கோ மேலாண்மை இயக்குநர்  க.சு.கந்தசாமி.    தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory