» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியை புறக்கணிக்கும் ரயில்வே நிர்வாகம் : நடவடிக்கை எடுக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!

சனி 16, செப்டம்பர் 2023 8:10:28 PM (IST)



தூத்துக்குடியில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "கொரோனா காலத்திற்கு முன்பு கடந்த 2011 ஆண்டு முதல் தூத்துக்குடி கோயம்புத்தூர் லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. அதன்பின் 2014 ஆம் ஆண்டு சென்னை -தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. இந்த ரயில்களை தூத்துக்குடி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி கிடைக்கப் பெற்ற ரயில்களாகும். இந்த ரயில்களை பொதுமக்கள் தூத்துக்குடியில் இருந்து கோவைக்கும் சென்னைக்கும் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். 

கொரோனா காலத்திற்குப் பின்பு லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இந்த ரத்து செய்த ரயில்களை மீண்டும் இயக்க ரயிலில் நிர்வாகத்திடம் தொடர்ந்து பயணிகள் நலச் சங்கத்தின் சார்பாக வலியுறுத்தி வருகிறோம். இப்படிப்பட்ட லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில் நிலைய தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்குவதில்லை என்று முடிவெடுத்துள்ளது. காரணம் என்னவென்றால் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் கோச்சிகளை கழட்டி மாட்ட முடியாது என்று தெற்கு ரயில்வே கூறுகிறது. 

இப்பிரச்சினை குறித்து தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் பாராளுமன்றத்திலும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் தரப்பிலும் எடுத்துரைத்துள்ளார்கள். கோரிக்கை வைத்த பலனாக தற்போது தூத்துக்குடி -கோவை லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பதிலாக வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் தூத்துக்குடி -மேட்டுப்பாளையம் ரயில்களை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே பரிந்துரைத்துள்ளது.. 

அதேபோல் திருநெல்வேலியில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வே ரயில்வே வாரியத்திடம் அனுமதி பெற்றுள்ளது. ஆனால் இன்று வரை தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இரவு நேர விரைவு ரயில், மற்றும் பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீடிப்பது போன்ற ரயில்களை ரயில்வே வாரியத்திடம் அனுமதி கிடைத்தும் இயக்காமல் தெற்கு ரயில்வே அதை கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இதேபோல் மும்பை- தூத்துக்குடி வாராந்திர சிறப்பு ரயில் மே கடைசி வாரம் முதல் செப்டம்பர் முதல் வாரம் வரை இயக்கப்பட்டது. இதையும் இப்போது இயக்காமல் ரயில்வே நிர்வாகம் தூத்துக்குடியை புறக்கணித்து வருகிறது தூத்துக்குடி சென்னை முத்து நகர் ரயில் எப்போதும் அதிக காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது இந்த ரயிலில் தூத்துக்குடியில் RAC பயணிப்பவர்கள் RACஆகத்தான் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல் சென்னை எழும்பூரில் இறங்குகிறார்கள். கொரோனா காலத்திற்கு முன்பு தூத்துக்குடி -சென்னை பகல் நேர ரயிலில் முத்துநகர் ரயிலில் இடம் கிடைக்காதவர்கள் இந்த பகல் நேர லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலை பயன்படுத்தி வந்தார்கள். 

இப்போது முத்துநகர் ரயில் மட்டும்தான் சென்னைக்கு தூத்துக்குடியில் இருந்து செல்ல முடிகிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு தெற்கு ரயில்வே நிர்வாகம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு ஒரு பகல் நேர நேரடி விரைவு ரயிலை இயக்க வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இதனால் தூத்துக்குடியில் இருந்து மதுரை திண்டுக்கல் திருச்சி திருவண்ணாமலை பாண்டிச்சேரி செல்பவர்கள் மிகுந்த பயனடைவார்கள். இந்தப் பகல் நேர ரயிலை தூத்துக்குடியில் இருந்து மேல்மருவத்தூர் செல்ல ஆதிபராசக்தி கோவில் வழிபாடு செய்ய சாதாரண மக்கள் பயன்படுத்த முன் வருவார்கள். 

ஆதலால் தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக தூத்துக்குடி -சென்னை பகல் நேர ரயில் இயக்க பரிந்துரை செய்ய வேண்டும். அதேபோல் ரயில்வே வாரியத்திடம் அனுமதி பெற்ற ரயில்களான திருநெல்வேலி -பாலக்காடு பாலருவி விரைவு ரயில் தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும். தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரத்திற்கு மூன்று நாட்கள் உடனடியாக இயக்க வேண்டும். தூத்துக்குடி -சென்னை பகல் நேர ரயில் இயக்க வேண்டும் தூத்துக்குடி -மும்பை வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக மாற்ற வேண்டும். அதுவரை மும்பை -தூத்துக்குடி ரயிலை சிறப்பு ரயிலாக இயக்க வேண்டும். 

இந்த துறைமுக நகரையும், தொழில் நகரையும் ரயில்வே நிர்வாகம் புறக்கணிக்காமல் விரைவாக செவ்வனே நிறைவேற்ற முன்வர வேண்டும். தூத்துக்குடியில் இவ்வளவு பெரிய ரயில் நிலையத்தை நாங்கள் வைத்துக் கொண்டு வாஞ்சி மணியாச்சி சந்திப்பு மற்றும் திருநெல்வேலி போன்ற நகரில் தூத்துக்குடி பயணிகள் ஏறிக் கொண்டிருக்கிறோம். அதற்காக இக் கோரிக்கைகளை விரைவாக பரிசிலனை செய்து தூத்துக்குடி நகரத்திலிருந்து மேற்காணும் ரயில் வசதிகளை செய்து கொடுத்து தூத்துக்குடி பயணிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தெற்கு ரயில்வே நிர்வாகத்தை பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரமநாயகம் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

P ANTONY SAMY tuticorinSep 18, 2023 - 10:22:57 PM | Posted IP 172.7*****

Mumbai to tirunelveli Vanchimamiyachi Stop please recruitment

TN69மே 26, 1695 - 06:30:00 AM | Posted IP 172.7*****

Aruppukottai via Chennai tracks are also useless

ஓட்டு ஒட்டு போட்ட முட்டாள்Sep 18, 2023 - 11:26:02 AM | Posted IP 162.1*****

அடிக்கடி விமானத்தில் ஊருக்கு பறக்கும் அரசியல்வாதிகளுக்கு கஷ்டம் தெரியாது. அரசியல்வாதிகள் தான் எல்லாத்தையும் செய்யணும்

kannanSep 18, 2023 - 06:56:51 AM | Posted IP 172.7*****

அதிக வசூல் பெற்றுத்தரும் தூத்துக்குடிக்கு இந்த நிலையா? பயணிகள் நலச்சங்கம் போராடே வேண்டும்.

SIVAKUMAR kSep 17, 2023 - 09:01:58 PM | Posted IP 172.7*****

150 varudam niraivu seaiyum inthu tuticorin railway station la daily 2 main train than operate aakuthu innum pala train service intha southern railway madurai division ketta innum 150 varudam wait pannanum avanga tirunelveli nagarkovil sengkottai intha city train service tharuvanga special train viduvanga innum puthu ragam train operate pannuvanga nam tuticorin makkaluku panna mattanga

MuruganSep 17, 2023 - 08:08:21 PM | Posted IP 172.7*****

In meter gauge period we had two more regular trains 1.TN CBE regular Fast passenger 2.TN MS Janatha Express along main line for so many years These trains are refused for Tuticorin after BG conversion and allocated to Tiruchendur (Chendhur) andNGL

KARNARAJ RAMANATHANSep 17, 2023 - 07:34:11 PM | Posted IP 162.1*****

WITH THE CURRENT RAILWAY STATION LOCATION, INCREASING TRAINS MAY CAUSE CITY ROAD TRAFFIC PROBLEMS AND WASTAGE OF PUPILS TIME AT GATE 1,2,3,4.... . ALSO FURTHER DEATHS IN VAIOUS UNPROTECTED CROSSINGS. INCREASING TRAIN CONNECTONS ARE MUCH NEEDED, WHICH SHOULD BE DONE AFTER SHIFTING STATION TO MEELAVITTAN. MONEY AND TIME WASTED IN PUTTING 2ND LINE FROM MEELAVITTAN TO CURRENT MAIN STATION AND SHIFTING MELUR STATION MIGHT HAVE BEEN SPENT FOR OVERHEAD MONORAIL(FROM CURRENT MAIN STATION TO MEELAVITTAN) PROECT. IN THAT WAY WE COULD HAVE GOT WIDE ROAD INSIDE CITY BY CONVERING RAILWAYLINES AREA TO FAST TRACK wide ROAD.

KARNARAJ RAMANATHANSep 17, 2023 - 07:24:58 PM | Posted IP 162.1*****

GOOD SUPPORT REQUEST, THANKS. WE COULD HAVE SAVED MORE MONEY AND PUPILS TIME SHBY IFTING RAILWAY STATION TO MEELAVITTAN WHICH ALREADY HAD 2 LINES.

ஜான் செல்வராஜ்Sep 17, 2023 - 03:08:30 PM | Posted IP 172.7*****

கேரளாவில் அரசியல்வாதிகள் கட்சி பாகுபாடு இல்லாமல் போராடி இரயில் சேவைகளை பெற்றுக் கொண்டார்கள். நமக்கு அந்த கொடுப்பினை கிடையாது

PremSep 17, 2023 - 07:35:33 AM | Posted IP 172.7*****

Port city is giving much more revenue,but people needs not at all bothered.southern railway very linen tendency to wards Thoothukudi.our Elected bodies also not worth. Since English times railways running in Thoothukudi but only one night train connected with capital.thoothkudi deserves more pilgrimage also.spirtual toursim boom,if Thoothukudi connected within tn ,inter state also.

ராஜாராம்Sep 16, 2023 - 10:15:34 PM | Posted IP 172.7*****

இது போன்று குரல் கொடுக்க அரசியல் வியாதிகள் இல்லையா? தூத்துக்குடியில்

Shiva SriSep 16, 2023 - 08:48:36 PM | Posted IP 172.7*****

பயணிகள் நலச் சங்கத்திற்கு நன்றி 🙏

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory