» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஹோர்முஸ் முடக்கத்திற்கு காரணமான ஈரான் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தகவல்!

வியாழன் 26, மார்ச் 2026 5:00:28 PM (IST)

மேற்காசியாவில் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைத் தளபதி அலிரேசா தங்சிரி, பந்தர் அப்பாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகளாவிய எரிபொருள் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை முடக்குவதற்குப் பொறுப்பானவர் அலிரேசா தங்சிரி. இவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், ஈரான் அல்லது இஸ்ரேல் ராணுவம் இதனை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது 'உண்மை வாக்குறுதி 4' என்ற ராணுவ நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களைக் குறிவைத்து இதுவரை 82 கட்டங்களாக ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் நடத்தியுள்ளது.

"உங்கள் குழந்தைகளை நெதன்யாகு மற்றும் டிரம்பின் பேச்சைக்கேட்டு நரகத்திற்கு அனுப்பாதீர்கள்" என்று அமெரிக்க மக்களுக்கு ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அமெரிக்காவின் 82-வது வான்வழிப் பிரிவு மத்திய கிழக்கு நாடுகளுக்கு விரைந்துள்ளதால், தரைவழிப் போர் தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரானின் ஏமட், கியாம் உள்ளிட்ட அதிநவீன ஏவுகணைகள் இஸ்ரேலின் ஹைஃபா, டிமோனா மற்றும் டெல் அவிவ் பகுதிகளில் உள்ள 70-க்கும் மேற்பட்ட இடங்களைத் தாக்கியுள்ளதாக ஈரான் உரிமை கோரியுள்ளது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அச்சம் நிலவுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory