» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே குண்டு வெடிப்பு: 12 பேர் உயிரிழப்பு
செவ்வாய் 11, நவம்பர் 2025 5:45:34 PM (IST)
இஸ்லாமாபாத்தில் நீதிமன்றம் வெளியே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே இன்று மதியம் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் உடனே மீட்புப் பணிக்கு விரைந்து சென்றனர்.
இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. உயர் அதிகாரிகள், அரசு அலுவலகங்கள் அமைந்த இந்த பரபரப்பான பகுதியில் நடந்த இச்சம்பவம் அங்கு பாதுகாப்பின்மையை எடுத்துக்காட்டுகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சவுதி அரேபியாவில் லாரி மீது பஸ் மோதி விபத்து : 42 இந்தியர்கள் பலி
திங்கள் 17, நவம்பர் 2025 11:59:28 AM (IST)

அமெரிக்காவில் மாட்டிறைச்சி, காபி, பழங்களுக்கு வரி குறைப்பு: அதிபர் டிரம்ப் உத்தரவு!
ஞாயிறு 16, நவம்பர் 2025 1:37:26 PM (IST)

ஈரான் ஏவுகணை திட்டத்திற்கு உதவி: இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை!!
சனி 15, நவம்பர் 2025 12:52:24 PM (IST)

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கு: நவம்பர் 17ல் தீர்ப்பு
வெள்ளி 14, நவம்பர் 2025 12:28:11 PM (IST)

அமெரிக்காவில் நிதி முடக்கம் முடிவுக்கு வந்தது : மசோதாவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்!
வியாழன் 13, நவம்பர் 2025 12:20:27 PM (IST)

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!
வியாழன் 13, நவம்பர் 2025 10:16:06 AM (IST)


.gif)