» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி தேர்வு!

செவ்வாய் 21, அக்டோபர் 2025 5:20:01 PM (IST)



ஜப்பானின் 104-வது பிரதமராகவும் முதல் பெண் பிரதமராகவும் சனே தகைச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரெல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்ததால், இஷிபா தனது பிரதமர் பதவியை கடந்த மாதம் ராஜிநாமா செய்தார்.

அதன்பின்னர், லிபரெல் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் சனே தகைச்சி (வயது 64), உள்கட்சி வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். லிபரெல் ஜனநாயகக் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்ற சனே தகைச்சியை, ஜப்பான் பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் இன்று நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் 465 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், 237 வாக்குகளைப் பெற்று ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, ஜப்பான் அரசரை சந்தித்து வாழ்த்து பெற்ற பிறகு, ஜப்பானின் 104-வது பிரதமராகவும் முதல் பெண் பிரதமராகவும் சனே தகைச்சி பதவியேற்கவுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory