» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கினார்கள்: ஒபாமா மீது டிரம்ப் விமர்சனம்!!

வெள்ளி 10, அக்டோபர் 2025 11:52:07 AM (IST)

ஒன்றும் செய்யாத பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு கடந்த 2009-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச ராஜதந்திரத்தையும் மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு போர்களை தான் நிறுத்தியதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கூறி வருகிறார். அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில் அது டிரம்புக்கு கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகும்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் 8 போர்களை நிறுத்திவிட்டேன். இதற்கு முன்பு அதுபோன்று நடந்ததில்லை. ஆனால் அவர்கள் (நோபல் பரிசு குழு) என்ன செய்தாலும் பரவாயில்லை. நான் அதற்காக அதை செய்யவில்லை என்பது எனக்கு தெரியும். 

நான் நிறைய உயிர்களைக் காப்பாற்றவே அதை செய்தேன். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர் ஒன்றும் செய்யவில்லை. இருந்தபோதிலும் அவருக்கு ஒரு பரிசு கிடைத்தது. ஆனால் அவர் நம் நாட்டை அழித்தார். ஒபாமா ஒரு நல்ல அதிபர் அல்ல என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory