» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்த கலிபோர்னியா மாகாணம்!

புதன் 8, அக்டோபர் 2025 11:52:34 AM (IST)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூசம் நேற்று தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் மசோதாவில் கையெழுத்திட்டதாக சட்டப்பேரவை உறுப்பினர் ஆஷ் கல்ராவின் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவின் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் 'ஏபி 268' என்ற மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் கவின் நியூசம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆளுநர் கவின் நியூசம் அக். 12 ஆம் தேதிக்கு முன்னர் மசோதாவில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கும் 'ஏபி 268' என்ற மசோதாவுக்கு ஆளுநர் கவின் நியூசம் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.

இதையடுத்து இந்திய அமெரிக்கர்களின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவித்துள்ளது, இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும்.

புதிய மசோதாவின்படி தீபாவளியன்று கலிபோர்னியா மாகாணத்தில் அரசு வேலைக்குச் செல்வோர், சமூகக் கல்லூரிகள், பொதுப் பள்ளிகள் முதலியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படும். தீபாவளி அரசு விடுமுறையை அடுத்து கலிபோர்னியாவில் அரசு விடுமுறை நாள்கள் 11 ஆக உயர்ந்துள்ளது.

கலிபோர்னியாவை தாயகமாகக் கொண்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்திய அமெரிக்கர்களுக்கு, இது மிகுந்த பெருமை மற்றும் மகிழ்ச்சிக்கான தருணம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு கலிபோர்னியாவின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு பங்களித்த இந்திய அமெரிக்கர்களின் தலைமுறைகளை கௌரவிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

"தீபாவளி சமூகங்களை நல்லெண்ணம், அமைதி மற்றும் பகிரப்பட்ட புதுப்பித்தல் உணர்வு ஆகியவற்றுடன் ஒன்றிணைக்கிறது." ஏற்கெனவே, 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த நிலையில், தற்போது கலிபோர்னியா மாகாணமும் அந்த பட்டியலில் மூன்றாவதாக இடம் பிடித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory