» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல்!

செவ்வாய் 7, அக்டோபர் 2025 3:59:46 PM (IST)



2025ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இயற்பியலுக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜான் கிளார்க், மைக்கேல் ஹெச். டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸுக்கு வழங்கப்படுவதாக அறிவியலுக்கர்ன ராயல் ஸ்வதேஷ் அகாதமி அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு,  மின் சுற்று தொடர்பான ஆய்வுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. எவ்வாறு, சுரங்கப்பாதைப் பணியின்போது பல காரணிகளை உள்ளடக்கிய மைக்ரோஸ்கோபிக் அளவீட்டில், எவ்வாறு கணக்கிட முடியும் என்பதை நிரூபிக்கும் சோதனைகளை அங்கீகரித்து வழங்கப்பட்டுள்ளது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோர் ஒரு மீள்கடத்தி மின்சுற்றைப் பயன்படுத்தி இந்த சோதனையை நடத்தியிருக்கிறார்கள். ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் நிகழாண்டு நோபல் பரிசு அறிவிப்பு தொடங்கியது. மூவருக்கும் நோபல் பரிசுடன் 11 மில்லியன் ஸ்வீடிஷ் கிரோனா் (சுமாா் ரூ.10.40 கோடி) பகிா்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 1901-ஆம் ஆண்டுமுதல், ஸ்வீடன் நாட்டைச் சோ்ந்த விஞ்ஞானியும், டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்தவருமான ஆல்ஃபிரட் நோபலின் உயிலின்படி, நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆல்ஃபிரட் நோபல் மறைந்த நாளான டிச.10-ஆம் தேதி ஸ்டாக்ஹோம் மற்றும் நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory