» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பிரான்சில் அரசுக்கு எதிரான போராட்டம் அறிவிப்பு : ஈபிள் கோபுரம் மூடல்!
சனி 4, அக்டோபர் 2025 12:11:40 PM (IST)

பாரிஸில், அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், பொதுமக்கள், மாணவர்கள் பேரணியைத் தொடங்கியதால் உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது.
பிரான்சில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனை சமாளிக்க பட்ஜெட்டில் அரசாங்க செலவினங்கள் குறைக்கப்பட்டன. அப்போது சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டதாக கூறி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதற்கிடையே நாட்டின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமிக்கப்பட்டார். ஆனால் இவரது நியமனம் போராட்டத்தை மேலும் தூண்டியது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் ‘அனைத்தையும் தடுப்போம்’ என்ற இயக்கத்தை தொடங்கி, நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். அதன்பேரில் தலைநகர் பாரீஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் குவிந்தனர்.
இதன் காரணமாக உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் மூடப்பட்டது. ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு இதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை அறியாமல் சென்றிருந்த மற்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒன்றும் செய்யாத ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கினார்கள்: ஒபாமா மீது டிரம்ப் விமர்சனம்!!
வெள்ளி 10, அக்டோபர் 2025 11:52:07 AM (IST)

ஹங்கேரி எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!
வியாழன் 9, அக்டோபர் 2025 5:50:42 PM (IST)

ஆப்கானிஸ்தான் விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்ற முயற்சி: இந்தியா எதிர்ப்பு!
வியாழன் 9, அக்டோபர் 2025 4:29:54 PM (IST)

தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்த கலிபோர்னியா மாகாணம்!
புதன் 8, அக்டோபர் 2025 11:52:34 AM (IST)

அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல்!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 3:59:46 PM (IST)

மருத்துவத்துக்கான நோபல் பரிசு: அமெரிக்கர்கள் இருவர் உட்பட மூவருக்கு பகிர்ந்தளிப்பு!
திங்கள் 6, அக்டோபர் 2025 5:34:08 PM (IST)
