» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது நாட்டுக்கே அவமானம்: ட்ரம்ப் வேதனை!

வெள்ளி 3, அக்டோபர் 2025 12:30:25 PM (IST)

அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய ட்ரம்ப், "எனக்கு நோபல் பரிசு தருவார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத யாரோ ஒருவருக்கு அதை கொடுப்பார்கள். அமைதிக்கான நோபல் விருது எனக்கு தரப்படாவிட்டால் அது நம் நாட்டுக்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும். எனக்கு அது வேண்டாம், நாடு அதைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நம் நாட்டுக்கு அது கிடைக்க வேண்டும்.

யுத்தங்கள் எதுவும் முடியவே முடியாது என்று பலரும் சொன்னார்கள். 31 ஆண்டுகள் வரை சில போர்கள் நீடித்தன. ஒரு போர் 36 ஆண்டுகள் நீடித்தது. ஆனால் நான் ஏழு போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். அவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டு போனார்கள். நான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகவும் தகுதியாவனன்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார். வரும் 10ஆம் தேதி நோபல் பரிசுகள் பெறுவோர் பட்டியல் வெளியாக உள்ள நிலையில் ட்ரம்பின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory