» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நேபாளத்தில் தொடரும் வன்முறை: வணிக வளாகங்களை கொள்ளையடிக்கும் பொதுமக்கள்!

புதன் 10, செப்டம்பர் 2025 5:25:44 PM (IST)

நேபாளத்தில் வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து பொதுமக்கள் கைக்கு கிடைத்த பொருட்களை மொத்தமாக அள்ளிச்சென்ற காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நேபாளத்தில் பிரதமர் கேபி சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. இவர் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியூப் உள்பட 26 சமூக வலைதளங்களுக்கு பிரதமர் கேபி சர்மா ஒலி தடை விதித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வன்முறையானது. இதனால் சமூக வலைதளங்கள் மீதான தடை ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் போராட்டக்காரர்கள் பின்வாங்கவில்லை. கேபி சர்மா ஒலியின் ஆட்சி மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. இதனை கண்டித்து அவ்வப்போது போராட்டங்கள் நடந்து வந்த நிலையில் கேபி சர்மா ஒலி ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதுமட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அரசியல்வாதிகளின் வீடு, நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் தீவைத்து எரிக்கப்பட்டது. இதனால் நேற்று வன்முறை கட்டுக்கடங்காமல் நாடு முழுவதும் பரவியது. இதையடுத்து கேபி சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் வன்முறை இன்னும் தொடர்கிறது. ராணுவம் தற்போது நாட்டை கட்டுப்பாட்டில் எடுத்து வன்முறையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே தான் நேபாள வன்முறை தொடர்பான வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. நாடாளுமன்ற கட்டத்துக்குள் நுழைந்து போராட்டக்காரர்கள் சூறையாடியது, தீவைத்தது, அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை விரட்டி விரட்டி தாக்கியது என பல்வேறு வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

அந்த வகையில் தற்போது இன்னொரு வீடியோ வெளியாகி உள்ளது. வன்முறையை பயன்படுத்திய சிலர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏசி, மிக்சி, கிரைண்டர், ஆடைகள், உணவு பொருட்கள் உள்பட பல விலை உயர்ந்த பொருட்களை அள்ளி சென்றனர்.

சில பெண்கள் பெரிய பெரிய பாக்ஸ்களை தலையில் சுமந்து தூக்கி சென்றனர். சூப்பர் மார்க்கெட், மால், ஷோரூம் உள்ளிட்ட பல இடங்களில் பொதுமக்கள் இந்த பகல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரவி வருகிறது.

அதேபோல் சில இடங்களில் ஜவுளி கடைகள் பூட்டுப்போட்டு பூட்டப்பட்டு இருந்தது. ஆனாலும் பொதுமக்கள் விடவில்லை. ஜவுளிக்கடைகளின் பூட்டை உடைத்தும், கண்ணாடி ஜன்னல்களை உடைத்தும் உள்ளே சென்று ஆடைகளை அள்ளி சென்றனர். இந்த வீடியோவும் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory