» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஷாங்காய் மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக தீர்மானம் : பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:19:14 PM (IST)

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபும் கலந்து கொண்டார்.
சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இந்திய பிரதமா் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, பயங்கரவாதத்துக்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சார்பில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதில், ”ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஷாங்காய் உறுப்பு நாடுகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.
பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தாக்குதல் நடத்தியவர்கள், நிதி மற்றும் ஆதரவு அளித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி: நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய ஸோரான் மம்தானி!
புதன் 5, நவம்பர் 2025 12:43:54 PM (IST)

பொம்மைகளை போல ஆப்கனிஸ்தானை இந்தியா இயக்குகிறது : பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
செவ்வாய் 4, நவம்பர் 2025 12:03:35 PM (IST)

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : தம்பியின் இளவரசர் பட்டத்தை பறித்த மன்னர் சார்லஸ்!
சனி 1, நவம்பர் 2025 11:23:39 AM (IST)

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்: சீன அதிபர் ஜின்பிங்
வியாழன் 30, அக்டோபர் 2025 12:16:06 PM (IST)

அமீரக லாட்டரியில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு
புதன் 29, அக்டோபர் 2025 4:46:14 PM (IST)

உக்ரைனில் அணுமின் நிலையம் அருகே நீல நிற நாய்கள்: சமூக ஊடகங்களில் வைரல்!
புதன் 29, அக்டோபர் 2025 12:35:18 PM (IST)


.gif)