» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 10 பேர் : 33 பேர் மாயம்!!

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:39:09 PM (IST)



சீனாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளனர். 

சீனாவின் கான்சு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக யொக்சங், லங்ஹொ நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதிகளில் கடும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 33 பேர் மாயமாகியுள்ளனர். 

மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை, கனமழை, வெள்ளப்பெருக்கால் மின்சாரம், தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கிராமங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory