» செய்திகள் - விளையாட்டு » உலகம்
அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவிப்பு
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 12:06:26 PM (IST)
அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ் எங்களுக்கு நாங்களே விதித்து கொண்ட சுயமான கட்டுப்பாடுகளுக்கு இனி நாங்கள் கட்டுப்பட மாட்டோம்.
அமெரிக்காவுக்கு எதிராக, குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன், அமெரிக்க அதிபர் டிரம்ப் அணு சக்தி நீர் மூழ்கி கப்பலை, ரஷ்யாவை அச்சுறுத்தும் வகையில் அருகில் கொண்டு செல்வதற்கு உத்தரவிட்டார். அதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீதும் டிரம்ப் வரி விதித்துள்ளார். இது தொடர்பாக ரஷ்யா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறியதாவது: துரதிர்ஷ்டவசமாக, தடைகளும் கட்டுப்பாடுகளும் தற்போதைய வரலாற்று காலகட்டத்தின் வரையறுக்கப்பட்ட அம்சமாக மாறிவிட்டன.
இது உலகம் முழுவதும் உள்ள நாடுகளை பாதிக்கிறது. சர்வதேச அரங்கில் தனது ஆதிக்கம் வீழ்ந்துவருவதை பொறுக்க முடியாத அமெரிக்கா, ஒரு புதிய காலனித்துவ கொள்கையை பின்பற்றுகிறது. சர்வதேச அரங்கில் சுதந்திரமான பாதையை தேர்வு செய்பவர்களுக்கு எதிராக பொருளாதார அழுத்தத்தை பயன்படுத்துகிறது.
ரஷ்ய நட்பு நாடுகள் மீது டிரம்ப் வரி விதிப்பது என்பது, இறையாண்மை மிக்க நாடுகளை நேரடியாக ஆக்கிரமிப்பது ஆகும். அவர்களின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதற்கு சமம்.
எந்தவொரு வரிப் போர்களோ அல்லது தடைகளோ வரலாற்றின் இயல்பான போக்கைத் தடுக்க முடியாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். குறிப்பாக குளோபல் சவுத் எனப்படும் ஏழை நாடுகள், பிரிக்ஸ் நாடுகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கின்றன.
மந்தமான பொருளாதார வளர்ச்சி கொண்ட அமெரிக்காவால், விநியோக சங்கிலிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளே ஊக்குவித்த தடையற்ற வர்த்தகத்தின் அடிப்படை கொள்கைக்கு மாறாக, அரசியல் ரீதியாக வரி விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம்: சீனா உறுதி
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 10:11:36 AM (IST)

இந்தியாவுடனான வர்த்தக மோதல் பாதிப்பை ஏற்படுத்தும் : டிரம்ப்புக்கு நிக்கி ஹாலே எச்சரிக்கை
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:42:38 PM (IST)

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும்: ரஷ்யா அறிவிப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 11:15:30 AM (IST)

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : அமெரிக்கா விளக்கம்
புதன் 20, ஆகஸ்ட் 2025 11:12:27 AM (IST)

குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்: புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:35:27 AM (IST)

போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
சனி 16, ஆகஸ்ட் 2025 12:14:42 PM (IST)
