» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுக்கான வரி 50% ஆக உயர்வு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

வியாழன் 7, ஆகஸ்ட் 2025 12:02:29 PM (IST)

இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50% ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீதஅடிப்படை கட்டணத்தையும் ட்ரம்ப் விதித்தார்.

இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 7- ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தாவிட்டால், கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளைவிதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory