» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ரஷியா இறக்குமதி குறித்து எனக்கு தெரியாது : இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு டிரம்ப் பதில்!
புதன் 6, ஆகஸ்ட் 2025 11:15:01 AM (IST)
ரஷியாவிடம் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் மூலம் கிடைக்கும் பணத்தை உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா பயன்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
அதேபோல், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீதும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வரி விதித்துள்ளார். அந்த வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். மேலும், இந்த வரியை உயர்த்துவேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த அறிவிப்பிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷியாவிடமிருந்து யுரேனியம், உரம், வேதிப்பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்வதாகவும், அமெரிக்கா இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுவதாகவும் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ரஷியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வது குறித்து டிரம்ப் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், ரஷியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வது குறித்து எனக்கு தெரியாது. இது குறித்து நான் ஆய்வு செய்துவிட்டு உங்களிடம் முழு விவரத்தையும் தெரிவிக்கிறேன்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம்: சீனா உறுதி
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 10:11:36 AM (IST)

இந்தியாவுடனான வர்த்தக மோதல் பாதிப்பை ஏற்படுத்தும் : டிரம்ப்புக்கு நிக்கி ஹாலே எச்சரிக்கை
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:42:38 PM (IST)

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும்: ரஷ்யா அறிவிப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 11:15:30 AM (IST)

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : அமெரிக்கா விளக்கம்
புதன் 20, ஆகஸ்ட் 2025 11:12:27 AM (IST)

குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்: புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:35:27 AM (IST)

போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
சனி 16, ஆகஸ்ட் 2025 12:14:42 PM (IST)

உண்மைAug 7, 2025 - 07:43:27 AM | Posted IP 172.7*****