» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரேசிலில் ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக வழக்கு : முன்னாள் அதிபருக்கு வீட்டுக்காவல்!

செவ்வாய் 5, ஆகஸ்ட் 2025 12:11:33 PM (IST)



பிரேசிலில் புதிய ஆட்சியை கவிழ்க்க முயன்ற வழக்கில் முன்னாள் அதிபர் பொல்சனாரோவை வீட்டுக்காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ (வயது 70). இதனிடையே, கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொல்சனாரோ தோல்வியடைந்தார். பிரேசில் அதிபராக லூயிஸ் இன்சியோலுலா டா சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேவேளை, தேர்தலில் தோல்வியடைந்தபோதும் அதிபர் பதவியில் இருந்து விலக பொல்சனாரோ மறுத்தார். மேலும், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக தனது ஆதரவாளர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், இறுதியில் புதிய அதிபராக சில்வா பதவியேற்றார்.

இதனிடையே, தேர்தல் தோல்வியை ஏற்கமறுத்தல், தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி, புதிய ஆட்சியை கவிழ்க்க சதி உள்பட பொல்சனாரோ மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொல்சனாரோ மீதான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில், பொல்சனாரோவை வீட்டுக்காவலில் வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பிரேசிலாவில் உள்ள பொல்சனாரோவின் வீட்டிற்கு சென்ற பாதுகாப்புப்படையினர் அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். மேலும், பொல்சனாரோவின் செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory