» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க கோரிக்கை : அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் ரணில்

வியாழன் 24, நவம்பர் 2022 10:22:04 AM (IST)

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அரசியல் சுயாட்சி வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அடுத்த மாதம் நடத்த உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பணிகளை பாராளுமன்றம் நிறைவுசெய்த பின்னர், டிசம்பர் 11 ஆம் தேதிக்கு பின்னர் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

"1984 ஆம் ஆண்டு முதல் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் தமிழ் எம்.பி. சுமந்திரன் குறிப்பிட்டார். நாம் ஒரு தீர்வைக் காண வேண்டும், இல்லாவிட்டால் 2048-ல் கூட இலங்கை அப்படியே இருக்கும். நீண்ட காலமாக நிலவி வரும் சிக்கலை தீர்ப்பதற்கு பெரும்பான்மையான சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவது முக்கியம். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும்" என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory